விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தானில் பிடிப்பட்டது இப்படிதான்: நேரில் பார்த்தவர் கூறுவது என்ன

முகமது ரசாக் சௌத்ரி பிப்ரவரி 27 ஆம் தேதி தன் வீட்டு முற்றத்தில் கட்டிலில் அமர்ந்தபடி தொலைபேசியில் உறவினருடன் பேசிக் கொண்டிருந்தார். பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள சமாஹ்னி மாவட்டத்தில், சிறிய மலையின் மீது உள்ள ஹோர்ரன் நகராட்சியில் ரசாக்கின் வீடு உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது.