Coronavirus News: "நாங்க செத்தாலும் தமிழகத்தில்தான்" - இரானில் வாடும் தமிழக மீனவர்கள்

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி ஒட்டுமொத்த சீனாவையும் புரட்டிபோட்டுவிட்டது.


இரண்டே மாதங்களில் 2,800 பேர் உயிரிழப்பதற்கு காரணமான கொரோனா வைரஸின் தீவிரம் சீனாவில் குறைய தொடங்கியுள்ள நிலையில், இந்த நோய்த்தொற்றின் தாக்கம், உலகின் மற்ற நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 56 நாடுகளில் கொரோனா வைரஸின் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் சில நாடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.



குறிப்பாக, சீனாவை அடுத்து தென் கொரியா மற்றும் இரான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.


இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பினால் இரானின் தீவுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் தென் கொரியாவில் கடும் நெருக்கடிகளுக்கு இடையில் வாழ்ந்து வரும் தமிழர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.